‘தரைக்கு வந்த விண்மீன்கள்’ – குழந்தைகள் உலகில் நுழைந்து வெளி வருவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அழகாக அதை சாதித்து விட்டு அமைதியாக இருக்கிறார் ‘ஆமிர் கான்’. இது போன்ற ஒரு அருமையான குழந்தைகள் சினிமா பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. கடைசியாக நான் இவ்வளவு ஒன்றி போய் சிறுவர்களின் சினிமாவை பார்த்தது ‘மஜித் மஜிடி’ இன் ‘சில்ரன் ஆப் ஹெவன்’ தான். அந்த உலக சினிமா’விற்கு கொஞ்சமும் சளைக்காமல் இந்தியாவிலும் படம் எடுக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் கொஞ்சம் கர்வமாகவே இருக்கிறது.
கமல் ஹாசனுக்கும், ஆமிர் கானுக்கும், நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்கள். இருவரும் ஆரம்ப காலங்களில் காதல், செண்டிமெண்ட், சண்டை, என கோமாளித்தனமான படங்களில் நடித்து கொண்டிருந்தவர்கள்.ஆனால் இருவருக்குள்ளும் தணியாத கலை தாகம் இருக்கிறது. எனவே நல்ல படங்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என தவம் செய்து கொண்டிருப்பவர்கள். இருவரும் வேறுபடுவது என நான் நினைப்பது கமல் இன்னும் தன் ஹீரோ இமேஜ் வலைத்தில் இருந்து வெளிவரவில்லை, ஆமிர் கான் இந்த படம் மூலமாக வெளியேறி விட்டார்.
படத்தை பற்றி நான் என்ன சொன்னாலும் அது கதையையும் அது இயங்கும் தளத்தையும் சொல்லி் விடுவது ஆகும். எனவே அதை நீங்கள் திரையில் பார்த்து கொள்ள விட்டு விடுகிறேன். நான் ரசித்த சில விஷயங்களை சொல்லி முடிக்கிறேன். ‘இஷான் அவஸ்த்தி’ (பிரதான பாத்திரமான சிறுவனின் திரை பெயர்) நடிக்க வில்லை வாழ்ந்து காட்டி இருக்கிறான். பெரியவர்களான நாம் நம்முள் உள்ள சிறுவர்களை தொலைத்து விட்டு நகர்த்தி கொண்டிருக்கும் வாழ்வில் நாம் தொலைத்தது என்னவெல்லாம் என்பதை காட்டி விடுகிறான் ‘இஷான்’. ஒரு முறை பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு தெருவில் அலைந்து திரியும் அப்பாடலில் அவன் காணும் எல்லாமே ஆச்சர்யமாய் இருக்கிறது. Ice cream உருகுவதும், ஏணியில் ஏறும் மனிதனை கீழிருந்து பார்ப்பது , என எல்லாமே கண்கள் அகல விரித்து காணுகிறான். அந்த கண்களுக்குள் நாமும் நுழைந்து விடுகிறோம். அவன் கனவுலகில் நாமும் மிதக்கிறோம். இப்படி படம் முழுக்க அந்த சிறுவன் நம் கைபிடித்து அழைத்து செல்கிறான். அவனது கண்ணீர் நம்மை கலங்க செய்கிறது, அவனது சிரிப்பு நம்மை சந்தோஷ படுத்துகிறது.
பக்கத்து வீட்டு சிறுவனோடு சண்டை பிடித்து கடித்து வைப்பது பின் அவர்கள் தாய் இவர்கள் வீட்டில் வந்து புகார் சொல்வது எல்லாம் ‘அஞ்சலி’ திரைப்படத்தை’ நினைவுபடுத்தியது. ஆமிர் தவிர்த்து இருக்கலாமோ? அதே போல் 3 X 9 என்ற கேள்விக்கு விடை தேடும் நோக்கில் ‘இஷான்’ நுழையும் கனவுலகம் ‘calvin & hobbes’ இன் ’spaceman spiff’ ஐ நினைவுபடுத்தியது. பரவாயில்லை! ஒரு நல்ல திரை படம் தந்ததால் மன்னித்து விடலாம் ‘ஆமிரை’. சில காட்சிகளில் கண்ணீர் நம் கண்களை ஆக்ரமித்து கொள்வதை தவிர்க்கவே முடியாது. அந்த அளவுக்கு மிக உணர்ச்சி பூர்வமாக காட்சியமைப்பு செய்திருக்கும் இயக்குனர் ஆமிருக்கு இந்த வருடத்தின் உலக விருதுகள் எல்லாம் கிடைக்க வேண்டும் என நான் ஆசைபடுகிறேன். நிச்சயம் நடக்கும்!
வழக்கமாக சில நல்ல படங்கள் பார்த்து முடித்த பின் ‘இந்த’ படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றும் ஆனால் ‘SEL’ அந்த மாதிரி எதுவும் தோன்றாமல் செய்து விட்டார்கள். பாடல்களும் பின்னணி இசையும் மிக அற்புதம். முக்கியமாக ‘மா’ பாடல் இடம்பெரும் காட்சியும், அதன் அலங்காரமற்ற, ப்ரஷுன் ஜோஷியின் வரிகளும், அதை ‘ஷங்கர் மகாதேவன்’ பாடி இருக்கும் விதமும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. எல்லா பாடல்களும் சரியான இடத்தில் வருகின்ற போதும் சில பாடல்களை திரையில் தவிர்த்து இருக்கலாமோ என தோன்றுகிறது. படபிடிப்பாளர் சேது’வை பாராட்டியே ஆக வேண்டும். எல்லா கதாபாத்திரங்களின் சிறிய சிறய உணர்ச்சிகளையும் தன் கமெராவில் அற்புதமாய் அடக்கி விடுகிறார்.
தமிழ் சினிமா இது போன்ற எல்லைகளை தொட வேண்டும் என ஆவல் கொள்ள வைக்கிறது, ஹிந்தியில் வரும் இது போன்ற சில திரைபடங்களை பார்க்கும் பொழுது. வெறும் கணவாய் போகாது இந்த ஆவல் என சென்ற 2007′இன் சரித்திரம் கூறுகிறது.
‘TAARE ZAMEEN PAR’
January 11, 2008 · 2 Comments
Categories: இசை · சினிமா/திரைப்படம்
2 responses so far ↓
kranthi // March 29, 2008 at 4:54 pm |
sometimes i feel kamal wastes all his talent in getting more importance to him that the movie itself.maybe he feels that only he can do justice to the movie…fear of delegation! aamir seems to have come out of the need and is willing to delegate…shows the confidence he has in other people’s abilities. thats why this movie is so enjoyable…we see more of ishan and are able to relate to him and the movie… if only kamal can come out of this, he can give many more hits. kaadhala kaadhala was supposed to be a prabu deva movie, bt kamal slowly creeped into the main role. he gave some space to maddy in anbe sivam,which probably is an all time classic which people dont seem to realise now.my friend, just like your need to have open relationships, pls come out of the raja world a bit to feel the world from other artistes’ view
though Raja is the Godfather, every now and then some lovely work is being done by others who want to create their own style in indian music! nice reading though… keep it up!
pulikesi // April 8, 2008 at 1:00 am |
Music of Raaja is so intricately woven into my system that its not so easy to come out of it
There is noway I can have a open relationship here
Yet I do enjoy other musicians and appreciate their attempt to create their own style. But mostly they stumble in BGM department! and yes i never hesitate to acknowledge if they had done a good job like in my review of TZP.
Agreed when kamal comes out of his ‘Narcistic’ admiration he can do wonders!