
மங்குனி ஏதொ புது படம் வந்திருகிறது என்று சொல்லி என்னை அழைக்கும் போதெ கேட்டிருக்க வேண்டும் தமிழ் படமா, ஆங்கில படமா என்று? சரி கருமம் தொலைகிறது போ என்று மீளதிகமாய் உபயோகிக்கபட்டிருக்கும் ஆங்கில வரிகளை மன்னித்து விடலாம், ஆனால் படத்தை இந்த ஊடகங்கள் எல்லாம் தூக்கி வைத்து கொன்டாடுவதை வைத்து திரைஅரங்குக்கு வந்த மக்கள் பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஒடுவதை பார்த்தால் எனக்கே சற்று பயமாய்த்தான் இருந்தது…இருந்தும் நான் இன்னாட்டு மாமன்னன் ஆயிற்றே! அதனால் மங்குனியின் கைகளை இறுக்க பற்றி கொன்டு படம் எப்பொழுது முடியும் என்று நான் தவித்த தவிப்பு இருக்கிறதே அப்பப்பா சொல்லில் அடக்க முடியாது…
நன்றாய் வாழ்ந்த ஒருவன் காதலி இறந்த பின் வாழ்வை போதையில் தொலைத்து பின் மீன்டு எழும் ஒரு வரி கதையை சொல்ல மூன்று மணி நேரம்…ஹும்ம் இதில் இடை இடையே ‘டாடி டாடி’ என்று ஒப்பாரி வேறு. உங்கள் வீட்டு ஒப்பாரியை வாசற்படியோடு முடித்து கொள்வதுதான் ஊருக்கு அழகு, அதை சந்தை வரை எடுத்து வந்தால் சரி அப்படி என்ன செய்தார் உங்கள் ‘டாடி’ என்பதற்க்கு முன்று மணி நேரமும் பதில் இல்லை…அப்படியே அழுத அந்த வாய்க்குள் என் மீசையை விட்டு ஒரு ஆட்டு ஆட்டி விடலாம் போல் நினைத்தேன், இப்படி குடி மக்களை தொல்லை செய்வது ஆணந்தனுக்கு தெரிந்தால் என்னிடம் கோபித்து கொள்வான் என்று அடக்கி வைத்தேன், துடித்த மீசையை.
ஏழைகள் மற்றும் அடி நடுத்தட்டு மக்களின் காதல் மற்றும் தந்தை-மகன் உறவை ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’, 7ஜி.ரெ.கா., பொல்லாதவன் போன்ற படங்களில் போதுமான அளவுக்கு அலசி விட்ட படியால் இதில் ஒர் உயர் நடுதட்டு மக்களின் குடும்ப உறவுகளை, முக்கியமாய் தந்தை-மகன் உறவை அலச போதுமான தளம் இருந்தும் அதில் இருந்து பயனிக்காமல் தாந்தோன்றியாய் அலைந்து திரிகிறது திரைக்கதை. தனி ஒரு மனிதனின் அவல புலம்பல் தேவைக்கு அதிகமாய் தினிக்க படுகிறது நம்முள். அப்படி தினிப்பதற்க்கு எந்த காரனமும் தேவை இல்லை என் தந்தையின் சாவு ஒன்று மட்டுமே போதும் என திமிர்த்தனமாய் அறைகூவுகிறார் இயக்குனர் ‘கவுதம் வசுதேவ் மேனன்’. ( மங்குனியிடம் சொல்லி முதலில் இவரை நாடு கடத்த வேண்டும், ஆணந்தனுக்கு தெரியாமல், இல்லை என்றால் அவன் வேறு கலை, கலை முயற்ச்சி, கலானுபவம், கலைஞர்களின் சுதந்திரம் என்று எல்லாம் புரியாத வார்தைகளில் பேசி குழப்பி விடுவான் குழப்பி)
இல்லை இல்லை தந்தை-மகன் உறவை நன்றாகத்தான் காட்டி இருக்கிறார் என்றான் மங்குனி! எங்கே எங்கே நான் கவனிக்க வில்லையே என்றதும் அவன் அடுக்கி கொன்டே போனான்
1. புகைப்பழக்கம் செய்யாதே என்கிறார்
2. மகனை அடித்தவர்களை போய் டரியல் செய்து விட்டு வா என்கிறார்
3. பிடித்த பென்னை அமெரிக்கா போய் அழைத்து வா என்கிறார்
4. போதை மருந்துகளை அழிக்கிறார்
5. மனம் போன போக்கில் எங்காவது போய் திரிந்து விட்டு வா என்கிறார்
6. பின்பு செத்து போகிறார்
ஆகாகா என்னே ஒரு புதிய காட்சிகள் தமிழ் திரைபடங்களில் நாம் பார்க்காத காட்சிகள்…மங்குனி நீ இப்பொழுது எல்லாம் க.க.க. கொள்வதே இல்லை! உனக்கு புதிதாய் ஒரு வைத்தியம் வைத்திருக்கிறேன் அரன்மனைக்கு வா காட்டுகிறேன் என்று சொன்னதும் பேய் முழி முழித்து ‘எம்மை மன்னித்து விடுங்கள் மன்னா’ என்று கதற துவங்கி விட்டான்.
உம்… அவனை சொல்லி குற்றம் இல்லை இப்படித்தான் பல பேர் ம.ர. மற்றும் க.வ.மே. போன்றோரின் படங்களில் உள்ள காட்சி அமைப்பு கவர்ச்சியையும் அலங்காரத்தையும் வைத்து திரைக்கதையில் உள்ள ஒட்டைகளை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள் ஆனால் மக்கள் கவனமாகத்தான் இருக்கிறார்கள் அவர்கள் இது போல் ‘ நல்ல சினிமா’ எடுக்கிறேன் என்று குப்பையை எடுத்து தள்ளும் இயக்குனர்களை குப்பையாக தள்ளி விடுவார்கள்…உன்மையாய் நான் குப்பை படம் தான் எடுக்கிறேன் என்று ஒப்பு கொள்பவர்களை மன்னித்து விடுவார்கள். நான் என்றும் மக்கள் பக்கமே! அடுத்த ‘பேரரசு’ படம் திரைக்கு வர தயாராம். ‘திருவண்னாமலை-ஆக் ஷன் ஜோதி’ பட்டையை கிளப்புமாம்.ஹ..ஹ..ஹா அந்தப்புர அழகிகளோடு வந்து ‘கிழ முனி’யொடு ‘கப்சி’ சேர்த்து அருந்தி விட்டு ‘ப்ரியா’ எலுமிச்சை ஊருகாயை நாவில் தொட்டு தடவி விட்டு, குத்தாட்டம் போட போவதை நினைத்தால் இப்பொழுதே நாடி நரம்பெல்லாம் அதிருகிறது. அடடா உனக்கு ஏன் கண்னை கட்டுகிறது மங்குனி? ஓ ஆணந்த கண்னீரா!
பி.கு. ‘காதல் என்பது இளையராஜாவின் இசை போல் உள்ளது’ என்று தமிழ் சமூகத்தின் அதி இசை கலைஞர் மேதகு இசைஞானியை திரைப்படத்தில் பாராட்டியமைக்காக க.வ.மே.னை நாடு கடத்துவது என்ற முடிவை தள்ளி வைக்கிறேன்.
3 responses so far ↓
Aki // November 23, 2008 at 9:22 am |
kallakkal review.. I’m happy at least there’s someone who thinks this is a fake version of Thavamaai Thavamirindhu and other honest films.
pulikesi // November 24, 2008 at 10:42 am |
Aki,
Its more like an urban version of TT but it didn’t work because the protagonist never delved into the relationship between him and his father while wailing loud ‘Daddy, Daddy…’, There was no justification at all for that ‘Oppari’ in the movie. The screeplay was totally messed up.
Harris’s music and Surya who had endured tremendous pain to enact this character.
The only saving grace of the movie were ‘Ilaiyaraaja’s songs
Aki // November 26, 2008 at 10:27 am |
I had no expectation on the film so your review wasn’t a surprise. Kaaka Kaaka worked to me to a little extent because of the matured(I thought) love story. I hated the cop-angle.. the second half was a big let down. VV was a major disappointment and I regret watching it.