
தினம் ஒரு முறை என்கிற கணக்கில் முன்று முறை பார்த்தாகி விட்டது! ஓவ்வொரு முறையும் பிரமிப்பு கூட தான் செய்கிறதே தவிர இன்னும் குறையவில்லை. விமர்சணங்களுக்கு அப்பாற்பட்டது இந்த ‘திரைப்படம்’ நம் கண் முன்னே விரித்திருக்கும் ஒதுக்கபட்டவர்களின் ‘வாழ்வு’. முதல் முறை பார்த்த பொழுது ஏதோ குறை இருபது போல் தோன்றிய்து, பின் மெல்ல மனதில் அசை போட்டு பார்த்ததில் இந்த ஊடகங்கள் நம் மனதில் ‘பிரிகன்ஸ்ட்ரக்ட்’ செய்து வைத்த படத்தை எதிர் பார்த்து சென்றது நம் தவறு என்பது புரிந்தது. அப்படி’ருத்ரனின்’ படத்தை எதிர்பார்த்து வந்தவர்களை ‘டிகன்ஸ்ட்ரக்ட்’ செய்து வெளி தள்ளுகிரார் ‘பாலா’.
சமூகத்தின் விளிம்புகளில் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நரகமாய் இருக்க, அந்த வாழ்வின் வேதனையை, அந்த வாழ்வின் குரூரத்தை, அந்த வாழ்வின் அவலத்தை, அதன் ஊடுபாவாய் இழையோடும் மய்ய மக்களின் மீதான எள்ளலை, ஆங்காரமாய் நம் மீது கட்டவீழ்த்து விடுகிறார். ஒரு வேட்டை நாயின் கோபத்தோடு திரையில் உலவும் மனிதர்கள் நம் மனசாட்சியை கடித்து குதறுகிறார்கள். இதில் ருத்ரனும் நம்மை போல் ஒரு பார்வையாளன். சமுக கட்டுகளில் இருந்த தன்னை விடுவித்து கொண்டவன். அவன் தான்
‘சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம்
மூலப்ரமேயம்
அயம் ப்ரம்மாஸ்மி
அஹம் ப்ரம்மாஸ்மி’
என்று உனர்ந்தவன். கருனை வடிவானவன். அவன் கருனை பிறவி சுழல் அறுக்கும் வல்லது. அவன் அமசவல்லியின் அவலத்தை கண்டு ஒரு ‘ஹிரோ’ போல் அதற்க்கு தீர்வு அளிக்காமல் ஒரு ‘கடவுள்’ போல் ‘ நிஷ்சலனாய், துஷ்ட்ட நிக்ரகஹனாய்’ சப்த லோக சௌரக்ஷனாய்’ தீர்வு அளிக்கிறான். நமக்கு அந்த தீர்வில் முரன்பாடுகள் இருக்கலாம் ஆனால் குறைந்த பச்சம் நாம் ‘ஹீரோ’வாக நம் வாழ்கையை அமைத்து கொண்டிருந்தால் இந்த ‘கடவுளருக்கு’ தேவை இருந்திருக்காது. மக்களுக்குள் இருக்கும் ‘ஹீரோ’க்களை இந்த படம் கொஞ்சமாவது உசுப்பி விடுமானால் படம் தனது நோக்கில் வெற்றி அடைந்ததாக சந்தோஷ பட வேன்டும்.
ஒரு திரைபடம் என்ற வகையில் ‘பாலா’ தனது முந்தைய படங்களை மீறி செல்கிறார் ‘ நான் கடவுளி’ல். ஒரு கலைஞனாய் மற்றெவரும் தொட முடியாத உச்சங்களில் தமிழ் சினிமாவை கொண்டு வைக்கிறார். கடந்த 75 ஆன்டு வரலாறும் இது போல் ஒரு கலைஞனை கண்டெடுக்க தான் தவம் இருந்து போலும். காட்டாற்று வெள்ளம் போல் தளை தகர்த்து முன்னெறி கொன்டிருக்கும் அவரிடம் மற்ற எல்லா இயக்குனர்களும் பாடம் படிக்க வேண்டும். ராஜா’வும், வில்சனும், ஜெய்மோகனும், நடிகர்களும், மற்றெல்லா கலைஞர்களும் இந்த ஒற்றை மனிதனின் மனதில் இருக்கும் ஒரு திரைபடத்தை கண்டடையும் நோக்கில் அவன் பின்னே கண்னனின் குழலுக்கு மயங்கிய மந்தையாய் தொடர்கிறார்கள். இப்படி எல்லோரையும் தனது திரைபடம் என்ற இலக்கை நோக்கி திருப்பிருக்கிறார் என்றால் ‘பாலா’வின் அளுமை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாய் இருக்கிறது.
ராஜாவும், வில்சனும் இதில் அவருக்கு மிக பெரிய பலம். வில்சனுக்கு கூட ‘பாலா’ தனது ‘ஸ்க்ரிப்ட்’ மூலமாக பல காட்சிகளை விளக்கி இருப்பார் ஆனால் என்ன மாதிரி இசை வேண்டும் என்பதை எப்படி விளக்கி இருப்பார்? அப்படி சுலபமாய் விளக்கி விடவும் முடியாது, ஏனெனில் இசை சூக்குமமானது. அவர் தனக்கு தேவைபட்ட உணர்வோட்டங்களை கூறி விளக்க, அதை ராஜா இசை மொழியாய் வடிதிருக்கும் அழகு இருக்கிறதே…சொல்லில் அடங்காது. குறிப்பாய் இடைவேளை முன் ருத்ரன் மந்த்ர உச்சாடனங்களோடு தன்னை ‘அஹம் பிரம்மாஸ்மி’ என அறிமுக படுத்திகொள்ளும் அந்த வேளையில் எதோ நாமே கடவுளாக மாறி விட்ட ஒர் உணர்வு தரும் இசை கோர்வை…சில்லிட வைக்கிறது. இன்னும் பல காட்சிகளில் இது போல் தன் இசை அளுமையை வெளிப்படுத்தினாலும் எங்கும் திரைப்படத்தை மீற முயலவில்லை. விருதுகள் இனி இவருக்கு வழங்குவதில் அர்த்தம் இல்லை. இசைக்கான விருதுகளை இனி இவர் பெயரில் வழங்குவது தான் ராஜா அள்ளி வழங்கியிருக்கும் இசை நெசவுகளுக்கு அர்த்தம் அளிக்கும்.
ருத்ரனாகவும், அம்சவல்லியாகவும் வாழ்ந்து காட்டியிருக்கும் அவர்களுக்கு நம் வணக்கங்கள். அம்சவ்ல்லியை விடுங்கள் அவருக்கு ‘காசி’ போன்ற படங்களில் முன்னுதாரனம் இருக்கிறது. ‘ருத்ரன்’தான் நம்மை மலைக்க வைக்கிறார், என்ன நடை? என்ன உடல் மொழி? என்ன பார்வை? அவர் வரும் ஒவ்வொரு ‘:ப்ரேமும்’ அவரே ஆக்ரமிக்கிறார். தன்னை கடவுளாக உணர்ந்த ஒரு மனிதன் எப்படி இருப்பான் என்பதை நம் கண்முன்னே காட்சி படுத்துகிறார். தன் தாய் தந்தையுடன் அவர் உறவாடும்…அல்ல உரையாடும் காட்சிகளில் அவர் காட்டும் கம்பீரம் நிஜ சித்தனாய் மாறி விட்டாலொழிய வந்து இருக்காது. நன்றி ‘பாலா’வுக்கு தமிழ் சினிமா கொண்டாட போகும் இன்னொரு நடிகனை உருவாக்கி தந்ததற்க்கு.
படம் பார்த்த பின் ஒரு நன்பர் கேட்டார் நல்லா இருக்கா நல்லா இல்லையா என்று…படத்தில் ஒரு காட்சியில் ‘ருத்ரன்’ கோவில் தீபத்தில் தன் கஞ்சா குழலை பற்ற வைப்பார், அப்பொழுது ஒரு சக சாமியார் கேட்பார் ‘சாமி நெருப்ப அசுத்த படுத்திட்டீங்களே’ என்று. ருத்ரன் திருப்பி கேட்பான் ‘ நெருப்புக்கு என்னடா சுத்தம் அசுத்தம்’ என்று. பாலாவின் ‘நான் கடவுள்’ படம் நெருப்பு போல்!
4 responses so far ↓
pulikesi // February 9, 2009 at 4:54 pm |
http://www.writerpara.com/paper/?p=488
http://cablesankar.blogspot.com/2009/02/blog-post_06.html
k // February 9, 2009 at 10:44 pm |
இசைக்கான விருதுகளை இனி இவர் பெயரில் வழங்குவது தான் ராஜா அள்ளி வழங்கியிருக்கும் இசை நெசவுகளுக்கு அர்த்தம் அளிக்கும். wow wow wow, Unmai.
plum // February 10, 2009 at 1:50 pm |
rs, that was a nice retort. People inserting their vakrams and expecting the same in the characters and refusing to see the director’s POV is very very funny
S.Suresh // February 13, 2009 at 12:18 pm |
My thoughts on Naan Kadavul at my blog :
http://sureshs65music.blogspot.com
S.Suresh