ஆயிரம் திருநாமம்?!!

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஹப்’ மய்யத்தில் பதிப்பிக்கப்பட்ட ‘ஆயிரம் திருநாமம் பாடி’ என்ற அப்துல் ரகுமானின் கவிதையை கண்டு கொதிப்படைந்து உடனடியாய் ஒரு எதிர்வினை புரிந்த கவிதை எனது ‘ஆயிரம் திருநாமம் தேடி’ . இரண்டு கவிதைகளும் இங்கு உங்கள் பார்வைக்கு. முதல் பதிப்புக்கு இங்கு செல்லவும்

http://www.mayyam.com/hub/viewtopic.php?t=97&postdays=0&postorder=asc&start=420

ஆயிரம் திருநாமம் பாடி!

ஒரு நாமம் ஓர் உருவம்
ஒன்றுமிலாய்! ஆயிரம்
திருநாமம் பாடி நாம்
தெள்ளேணம் கொட்டுகிறோம்

தாய் தந்தை பெயர் சூட்ட
தலைவனுகின்மையால்
வாய் தந்த பெயரைஎல்லாம்
வேதுன்னை அழைக்கின்றோம்

அரண் என்றழைப்பினும்
வரன் கொடுப்பவன் நீ
அரிஎன்றிசைப்பினும்
சரிஎன்றிசைப்பாய்
கர்த்தன் என்றுரைப்பினும்
அர்த்தம் நீதான்
அல்ல எனினும் நீ
அல்லாது வேறு யார்?

பாகுபெயரோ பாகற்
காய்ப்பெயரோ எப்பெயரும்
ஆகுபெயர் தான் உனக்கு
ஆகாத பெயருண்டோ?

இடுகுறியாய்ச் சொல்வதற்க்கோ
இயற்பெயர் ஒன்றில்லாதாய்
தொடு குறியாய் நாக்குவிரல்
தொட்டதெல்லாம் உன்பெயரே!

காரணப்பேர் வைப்பதென்றால்
காரியங்கள் ஒன்றிரண்டா?
தோரணம்போல் மொழிக்கொடியில்
தோன்றாதோ பலகோடி?

காலமெனும் ஏட்டில்
கதையெழுதி குவிக்கின்ற
மூலஎழுத் தாளன் நீ
முளைத்து வந்த பாத்திரம் நாம்

ஒரு கோடி புனை பெயர்கள்
உனக்கு நாம் சூட்டுகிறோம்

பாவை அருகிருக்க
பஞ்சனையும் காத்திருக்க
தேவை என்ற காரணத்தால்
தேன் என்றும் மான் என்றும்
கண்ணென்றும் கணிஎன்றும்
கரும்பென்றும்,
அவள் வெறும்
பெண்ணென்று தெரிந்திருந்தும்
பேர் நூறு பிதற்றுகிறோம்
சிற்றின்ப சிலிப்புர்க்கே
இத்தனைப்பேர் தோன்றுமென்றால்
பேரின்ப போதையிலே
பெயர் கோடி குவியாதோ?

மௌன அழைப்புக்கே
வந்துவிடும் காதலன் நீ
பெயர்க்கைகள் அசைக்கின்ற
பேதைகள் நாம்! மன்னிப்பாய்!

உயர் மௌன பொருளே!
ஒலிச் சந்தைக்காரர் நாம்
பெயர் நாணயங்களால்
பேரம் உனைப் பேசுகின்றோம்

நின்னை பேர் இட்டழைக்க
நீ என்ன சின்னவனா?
சின்ன குழந்தைகளின்
சிறு மழலை விரும்புவாயோ?

எங்கள்
முறையீட்டு மடல்களுக்கு
முகவரி தேவைஎன்று
இறைவனே நாமுனக்கு
ஏதோ ஓர் பேர்வைத்தோம்

எங்கள் முகவரிக்கும்
மேற்பார்வை முகவரி நீ
உன் பெயரில் முடிகின்ற
பெயரெச்சம் நாமெல்லாம்

எங்கள்
நாக்குகளில் மட்டுமா உன்
நாமம்? உயிரினத்தின்
மூக்கெல்லாம் உன்பெயரை
மூச்சாக முணுமுணுக்கும்
இலைகளெல்லாம் உன் பெயரை
இசைக்கின்ற நாவுகளே
மலரின் இதழ்களிலே
மணமே உன் பெயராகும்

ஆத்திகர் நாவினிலே நீ
அமர்ந்திருத்தல் வியப்பில்லை
நாத்திகரின் நாவினிலும்
நடம் புரியும் நாயகன் நீ
‘இல்லை’ எனும் பெயரே
இறைவ! அவருனக்குச்
சொல்லுகின்ற பெயரென்றால்
எல்லையுண்டோ உன்பெயர்க்கே!

ஆயிரம் திருநாமம் தேடி…

இல்லாத ஒன்றுக்கே
இத்தனை பெயர் வைப்பதென்றால்
இருக்கும் எங்கள் அவலத்திற்க்கு
எத்தனை பெயர் வைத்திடுவீர்!

ஆனாலும் ஓர் பெயரே வைத்தெம்மை வாட்டுகின்றீர்
காணாமல் ஒளிந்திருக்கும் கடவுளையே காட்டுகின்றீர்

வறுமைக்கும் – விதியென்பீர்!
மூடர் அவர்தம் சிறுமைக்கும் – விதியென்பீர்!
மதவெறிக்கும் – விதியென்பீர்!
காடர் அவர்தம் கொலைவெறிக்கும் – விதியென்பீர்!
சாதிக்கும் – விதியென்பீர்!
காலம் எமை சோதிக்கும் – விதியென்பீர்!

எத்திக்கும் இல்லாமல்
ஏதிலிகள் – விதியென்பீர்!
நா திக்கும் சொல்லாமல்
எம் வலிகள் – விதியென்பீர்!

சோகங்கள் இத்தனைக்கும் ஓர் பெயரே
கொடுக்கும் கடவுளுக்கு ஏன் ஆயிரம்?

பரமபிதா ராஜ்ஜியத்தில் பரலோகம் சென்று வர
பாஸ்போர்ட் ஒன்று வேண்டிடினும்
அல்லாத அல்லாவை, பேரன்ட பரம்பொருளை
காண கண் வேண்டிடினும்
அரன் என்றழைத்திடினும்
அரி என்றழைத்திடினும்
ஆரும் இலர் வருகுதற்க்கு
அறியாதார் அறிந்து கொள்வீர்…

காமம் கண் திறக்க,
காதல் எமை மயக்க,
தொட்டு தடவி,
முத்தமிட்டு சுவைத்து,
வாசனைகள் நுகர்ந்து,
கவிச்சொல் கேட்டு,
காதலியை கண் பார்த்து…
அய்ம்புலனும் ஓர்சேர
ஆறாம் புலனாலே,
வெறும் பெண்னல்ல என்றறிந்து
உயிராய், உடலாய், உன்மையாய்,
எம்முன்னே காட்சி தரும் அவளை
நான் புகழ்ந்துதான் பிதற்றுவேன்

எப்புலனும் உணராமல் வெறும்
கற்பனையில் வாழும் ஓர் அருவை
ஏன் நாமும் அகவ வேண்டும்!

இல்லாத கடவுளுக்கு
ஆயிரம் நாமம் இட்டு
செல்லாத ஊருக்கு வழி காட்டும் மூடர்காள்!
பரலோக வாழ்வுக்கு
ஆயிரம் வரம் கேட்டு
இருக்கும் வாழ்வதனை வாழ்ந்திடா வீணர்காள்!

 புரிந்துகொள்!

ஆத்திகர் செய்த தீங்கு
பல்லான்டாய் பல கோடி
நாத்திகர் செல்வதிங்கு
பாமரர் விடியல் தேடி

‘இல்லை’ என யாம் சொன்னால்
அதையும் ஓர் பெயர் என்றால்
கிள்ளை மொழி போல பேசும்
உம் பிதற்றலுக்கும் எல்லையுன்டோ!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s