நீ அவதரித்த இன்னன்ணாளில்! – JUNE 2, 2008

இசையே!
மனித இசைப்பனி தொகுப்பின் மொத்த வடிவே
இசையே!
புனித இறை அனிவகுப்பின் மெத்த முடிவே
உமக்கும் எமக்கும் ஓர் ஓற்றுமை!
இருவருக்கும் கடவுள் நாமம் அய்ந்தெழுத்து
உனக்கு ‘நமசிவாய’
எமக்கு ‘இளையராஜா’
பெத்தலகெம்மின் மேய்ப்பன் நீ
மயங்கிய மந்தைகள் யாம்
கோவர்தன கிரிதரன் நீ
கோகுலத்தின் குடிகள் யாம்
ஹாம்லினின் மந்திரன் நீ
கட்டுண்ட குழந்தைகள் யாம்
நீ வாசித்த மூங்கில்கள் ‘குழல்’களாயின
நீ மீட்டிய தந்திகள் ‘யாழ்’களாயின
நீ பயின்ற தோல்கள் ‘முழவு’களாயின
சிதறி கிடந்த நாகரீகங்களின் இசையை
மாலையாக்கினாய்
விரிந்து கிடந்து பாலைகளின் வாழ்வை
சோலையாக்கினாய்
இசை நீ
இசையின் ஒறறை திசை நீ
இசை நீ
எங்கள் உயிரின் விசை நீ
இசை நீ
இசையின் தனி வகை நீ
இசை நீ
வழங்குவதில் பெருந்தகை நீ
இசை நீ
என்றும் நில்லாமல் இசை நீ
இசை நீ
இவ்வேண்டுதலுக்கிசை நீ
இசை நீ
கேளா இசையதோர்க்கும் இசை நீ

இசைக்காய் – இருப்பது தவம் நீ
கிடைப்பது வரம் எமக்கு
இசைக்காய் – வேள்வியின் விறகு நீ
கிடைப்பது சிறகு எமக்கு

எங்கும் இசையாய் நீக்கமற நிறைந்தவனே
என்ன செய்தோம் உனக்கு?
எங்கள் வாழ்வை வண்ணமுற வரைந்தவனே
என்ன செய்வோம் உனக்கு?

யாசகர் யாம்!
யாசிப்போம்
நின் இசை என்றும் ஒலித்திருக்க,
போற்றுவோம்
நின் வளம் என்றும் கொழித்திருக்க,
நீ அவதரித்த இன்னன்ணாளில்!

இசை கடவுளுக்கு ஓர் பிறந்த நாள் வாழ்த்து – June 2nd, 2005.

குழந்தைகள் நாங்கள் தாலாட்டினாய்
விடலைகள் நாங்கள் காதல் சீராட்டினாய்
வெட்டிகள் நாங்கள் மெருகேற்றினாய்
வெற்றியில் எங்களை பாராட்டினாய்

பிணம் நாங்கள் உயிரூட்டினாய்
கணம் தோறும் உயிர்ப்பூட்டினாய்
அழுகையில் எங்களை தேற்றினாய்
விழுகையில் எங்களை ஏற்றினாய்

மூடர்கள் நாங்கள் முழுமை பெற்றோம்
சீடர்கள் நாங்கள் உனையே கற்றோம்

அவதாரமே எங்கள் உயிர் ஆதாரமே
உனை கேட்டால் செவிக்கில்லை சேதாரமே

சாரலாய் எங்கள் இதயம் நனைத்திடுவாய்
சரலமாய் எங்கள் தாகம் தீர்த்திடுவாய்

மார்கழி மாத விடியல் நீ
மாந்தர்கெல்லாம் இசை படையல் நீ

மாயன் நீ – நோய்க்கு மருந்தாவாய்
தூயன் நீ – செவிக்கு விருந்தாவாய்

தென்றல் நீ புயல் நீ
கடல் நீ அலை நீ
மலை நீ மரம் நீ
வான் நீ மன் நீ
எங்கள் மன்னன் நீ

காதல் நீ காமம் நீ
பாசம் நீ பரவசம் நீ
மணம் நீ குணம் நீ
தணம் நீ சினம் நீ
அகம் நீ புறம் நீ
எல்லாம் நீ
எங்கள் இசைஞானி

காற்றுள்ள காலம் வரைக்கும்
போற்றுவோம் நின் இசையை
காற்றில்லா வெளி வரைக்கும்
ஏற்றுவோம் உன் புகழை

இசையே எங்கள் இறையே
வாழிய நீ பல்லாண்டு

 

Advertisements

2 responses to “நீ அவதரித்த இன்னன்ணாளில்! – JUNE 2, 2008

  1. he is great

  2. heis great music musicis raja raja is music

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s