பாலாவின் ‘நான் கடவுள்’

தினம் ஒரு முறை என்கிற கணக்கில் முன்று முறை பார்த்தாகி விட்டது! ஓவ்வொரு முறையும் பிரமிப்பு கூட தான் செய்கிறதே தவிர இன்னும் குறையவில்லை. விமர்சணங்களுக்கு அப்பாற்பட்டது இந்த ‘திரைப்படம்’ நம் கண் முன்னே விரித்திருக்கும் ஒதுக்கபட்டவர்களின் ‘வாழ்வு’. முதல் முறை பார்த்த பொழுது ஏதோ குறை இருபது போல் தோன்றிய்து, பின் மெல்ல மனதில் அசை போட்டு பார்த்ததில் இந்த ஊடகங்கள் நம் மனதில் ‘பிரிகன்ஸ்ட்ரக்ட்’ செய்து வைத்த படத்தை எதிர் பார்த்து சென்றது நம் தவறு என்பது புரிந்தது. அப்படி’ருத்ரனின்’ படத்தை எதிர்பார்த்து வந்தவர்களை ‘டிகன்ஸ்ட்ரக்ட்’ செய்து வெளி தள்ளுகிரார் ‘பாலா’.

சமூகத்தின் விளிம்புகளில் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நரகமாய் இருக்க, அந்த வாழ்வின் வேதனையை, அந்த வாழ்வின் குரூரத்தை, அந்த வாழ்வின் அவலத்தை, அதன் ஊடுபாவாய் இழையோடும் மய்ய மக்களின் மீதான எள்ளலை, ஆங்காரமாய் நம் மீது கட்டவீழ்த்து விடுகிறார். ஒரு வேட்டை நாயின் கோபத்தோடு திரையில் உலவும் மனிதர்கள் நம் மனசாட்சியை கடித்து குதறுகிறார்கள். இதில் ருத்ரனும் நம்மை போல் ஒரு பார்வையாளன். சமுக கட்டுகளில் இருந்த தன்னை விடுவித்து கொண்டவன். அவன் தான்
‘சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம்
மூலப்ரமேயம்
அயம் ப்ரம்மாஸ்மி
அஹம் ப்ரம்மாஸ்மி’
என்று உனர்ந்தவன். கருனை வடிவானவன். அவன் கருனை பிறவி சுழல் அறுக்கும் வல்லது. அவன் அமசவல்லியின் அவலத்தை கண்டு ஒரு ‘ஹிரோ’ போல் அதற்க்கு தீர்வு அளிக்காமல் ஒரு ‘கடவுள்’ போல் ‘ நிஷ்சலனாய், துஷ்ட்ட நிக்ரகஹனாய்’ சப்த லோக சௌரக்ஷனாய்’ தீர்வு அளிக்கிறான். நமக்கு அந்த தீர்வில் முரன்பாடுகள் இருக்கலாம் ஆனால் குறைந்த பச்சம் நாம் ‘ஹீரோ’வாக நம் வாழ்கையை அமைத்து கொண்டிருந்தால் இந்த ‘கடவுளருக்கு’ தேவை இருந்திருக்காது. மக்களுக்குள் இருக்கும் ‘ஹீரோ’க்களை இந்த படம் கொஞ்சமாவது உசுப்பி விடுமானால் படம் தனது நோக்கில் வெற்றி அடைந்ததாக சந்தோஷ பட வேன்டும்.

ஒரு திரைபடம் என்ற வகையில் ‘பாலா’ தனது முந்தைய படங்களை மீறி செல்கிறார் ‘ நான் கடவுளி’ல். ஒரு கலைஞனாய் மற்றெவரும் தொட முடியாத உச்சங்களில் தமிழ் சினிமாவை கொண்டு வைக்கிறார். கடந்த 75 ஆன்டு வரலாறும் இது போல் ஒரு கலைஞனை கண்டெடுக்க தான் தவம் இருந்து போலும். காட்டாற்று வெள்ளம் போல் தளை தகர்த்து முன்னெறி கொன்டிருக்கும் அவரிடம் மற்ற எல்லா இயக்குனர்களும் பாடம் படிக்க வேண்டும். ராஜா’வும், வில்சனும், ஜெய்மோகனும், நடிகர்களும், மற்றெல்லா கலைஞர்களும் இந்த ஒற்றை மனிதனின் மனதில் இருக்கும் ஒரு திரைபடத்தை கண்டடையும் நோக்கில் அவன் பின்னே கண்னனின் குழலுக்கு மயங்கிய மந்தையாய் தொடர்கிறார்கள். இப்படி எல்லோரையும் தனது திரைபடம் என்ற இலக்கை நோக்கி திருப்பிருக்கிறார் என்றால் ‘பாலா’வின் அளுமை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாய் இருக்கிறது.

ராஜாவும், வில்சனும் இதில் அவருக்கு மிக பெரிய பலம். வில்சனுக்கு கூட ‘பாலா’ தனது ‘ஸ்க்ரிப்ட்’ மூலமாக பல காட்சிகளை விளக்கி இருப்பார் ஆனால் என்ன மாதிரி இசை வேண்டும் என்பதை எப்படி விளக்கி இருப்பார்? அப்படி சுலபமாய் விளக்கி விடவும் முடியாது, ஏனெனில் இசை சூக்குமமானது. அவர் தனக்கு தேவைபட்ட உணர்வோட்டங்களை கூறி விளக்க, அதை ராஜா இசை மொழியாய் வடிதிருக்கும் அழகு இருக்கிறதே…சொல்லில் அடங்காது. குறிப்பாய் இடைவேளை முன் ருத்ரன் மந்த்ர உச்சாடனங்களோடு தன்னை ‘அஹம் பிரம்மாஸ்மி’ என அறிமுக படுத்திகொள்ளும் அந்த வேளையில் எதோ நாமே கடவுளாக மாறி விட்ட ஒர் உணர்வு தரும் இசை கோர்வை…சில்லிட வைக்கிறது. இன்னும் பல காட்சிகளில் இது போல் தன் இசை அளுமையை வெளிப்படுத்தினாலும் எங்கும் திரைப்படத்தை மீற முயலவில்லை. விருதுகள் இனி இவருக்கு வழங்குவதில் அர்த்தம் இல்லை. இசைக்கான விருதுகளை இனி இவர் பெயரில் வழங்குவது தான் ராஜா அள்ளி வழங்கியிருக்கும் இசை நெசவுகளுக்கு அர்த்தம் அளிக்கும்.

ருத்ரனாகவும், அம்சவல்லியாகவும் வாழ்ந்து காட்டியிருக்கும் அவர்களுக்கு நம் வணக்கங்கள். அம்சவ்ல்லியை விடுங்கள் அவருக்கு ‘காசி’ போன்ற படங்களில் முன்னுதாரனம் இருக்கிறது. ‘ருத்ரன்’தான் நம்மை மலைக்க வைக்கிறார், என்ன நடை? என்ன உடல் மொழி? என்ன பார்வை? அவர் வரும் ஒவ்வொரு ‘:ப்ரேமும்’ அவரே ஆக்ரமிக்கிறார். தன்னை கடவுளாக உணர்ந்த ஒரு மனிதன் எப்படி இருப்பான் என்பதை நம் கண்முன்னே காட்சி படுத்துகிறார். தன் தாய் தந்தையுடன் அவர் உறவாடும்…அல்ல உரையாடும் காட்சிகளில் அவர் காட்டும் கம்பீரம் நிஜ சித்தனாய் மாறி விட்டாலொழிய வந்து இருக்காது. நன்றி ‘பாலா’வுக்கு தமிழ் சினிமா கொண்டாட போகும் இன்னொரு நடிகனை உருவாக்கி தந்ததற்க்கு.

படம் பார்த்த பின் ஒரு நன்பர் கேட்டார் நல்லா இருக்கா நல்லா இல்லையா என்று…படத்தில் ஒரு காட்சியில் ‘ருத்ரன்’ கோவில் தீபத்தில் தன் கஞ்சா குழலை பற்ற வைப்பார், அப்பொழுது ஒரு சக சாமியார் கேட்பார் ‘சாமி நெருப்ப அசுத்த படுத்திட்டீங்களே’ என்று. ருத்ரன் திருப்பி கேட்பான் ‘ நெருப்புக்கு என்னடா சுத்தம் அசுத்தம்’ என்று. பாலாவின் ‘நான் கடவுள்’ படம் நெருப்பு போல்!

Advertisements

5 responses to “பாலாவின் ‘நான் கடவுள்’

 1. http://www.writerpara.com/paper/?p=488

  அன்பு பா.ரா.,

  தவறாக புரிந்து கொள்ளப்படும் சினிமா, சரியாக புரிந்து கொள்ளப்படும் வாழ்க்கையை விட அபாயகரமானது! ருத்ரனின் ஆன்மிக கருத்துக்ககளை பாலாவின் மீது ஏற்றி பார்க்கும் சினிமா பார்வையை எங்கிருந்து பயின்றிர்கள் என்பதை தெளிவுபடுத்தவும். பாலா ஒரு ‘filmmaker’ அவ்வளவே. அவர் எடுக்கும் சினிமாக்கள் சாதாரணர்களை விடுத்து வேற்று மனிதர்களை பற்றி பேசுவது. வாழ்க்கையிலிருந்தே தன் கதை மாந்தர்களை தேர்ந்தெடுத்தாலும் அவர் அதில் அதிதங்களை நோக்கி நகர்பவர். இந்த படம் பேசுவது ‘வாழ்க்கை அவலமாய் இருக்கும் ஒருத்திக்கும், வாழ்க்கையை தனகங்காரத்தால் வென்றெடுத்த ஒருவனுக்கும்’ நேரும் பரிமாற்றம் பற்றி.

  சரி அப்படியே ஆன்மிக புரிதலோடுதான் படம் எடுக்க வேண்டும் என்றால் எந்த புரிதலோடு துவங்குவது? த்வைதம், அத்வைதம், சாங்கியம், மிமாம்சம், சமணம், இஸ்லாம், பௌத்தம், கிருத்துவம்… என நீ..ளு..ம்.. இந்த பட்டியலிலிருந்து எதை தேர்வு செய்வது? மற்றெல்லா ஆன்மிக புரிதலுமே ஒன்றை மட்டும் புரிந்தவர்க்கு தவறு தானே? ஆப்படியாயின் ருத்ரனின் (அல்லது பாலாவின் – உங்கள் பார்வையில்) புரிதல் தவறு என்று சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது?

  இந்த படம் என்ன வகையான மன பிம்பங்களை நம்முள்ளே தோற்றுவிக்கிறது அல்லது கட்டமைக்கிறது என்பதை மட்டும் பார்க்க வேண்டும். என்னுடன் வந்து நண்பன் சொன்னான் ‘ருத்ரன் அந்த வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சியை இன்னும் பிரமாதமாக எடுத்து இருக்கலாம் என்று’. நான் கேட்டேன் ‘எப்படி ‘பாட்சா’ ‘சாமி’ போன்ற படங்களில் கொஞ்சம் கொஞ்சமா உருவேத்திகிட்டே போயி நச்சுன்னு அடிப்பாங்களே அந்த மாதிரியா’ என்று? ‘Exactly’ என்றான் அவன். ‘As a film maker Bala has succeeded in alienating yourself from ‘Rudran’, as alienated ‘Rudran’ is from the mainstream society’ . பிதாமகன்’இல் இருந்த சித்தனுடனான அந்த ‘emotional connection’ஐ அறுத்து எறிந்து அவர் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார் என்றேன். அடுத்து என்ன செய்வார் பாலா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

  மற்றபடி நமக்கெல்லாம் ‘பேரரசு’ படம்தாங்க பெஸ்ட்டு. குத்து பாட்டு, தொப்புள் டான்ஸ், தொடை தட்றது, பன்ச் டயலாக்குன்னு களை கட்டும்ள்ள. ‘நான் கடவுள்’ காமிக்கிற உலகத்த விட்டு, ‘திருவண்ணாமலை’ ஆக்ஷன் ஜோதில கலந்து கூத்தடிக்கலாம் வாங்க.

  தோழமையுடன்,
  புலிகேசி

  http://cablesankar.blogspot.com/2009/02/blog-post_06.html

  பூஜாவிடம் நீ வயசுக்கு வந்திட்டியான்னு கேட்கும் பிச்சைகார தலைவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யாமல் கடைசிவரை பாதுகாப்பது படத்தின் இயல்பு நிலைக்கு மாற்றான காட்சிகள்.

  ச்சே ஒரு ரேப் சீன் மிஸ்ஸாகி விட்டதே! ஏற்கனவே கிழிந்து தொங்கும் அம்சவல்லியின் சட்டையை இன்னும் கொஞ்சம் கிழித்து காட்டும் பொழுது ‘ருத்ரன்’ வந்து அவளை காப்பாற்றுவது போல் காட்சி அமைத்திருந்தால் – கொஞ்சம் கிளிகிளுப்பாகவும் கொஞ்சம் ஹிரோத்தனமும் கலந்து கட்டி ரவுண்ட அடிக்க பாவம் பாலாவுக்கு தெரியவில்லை, அவர் தாண்டவனை வெறும் காசுக்கு அலையும் போக்கிரியாய் உருவாக்கிவிட்டார்.

  நான் ரேப் சீன் போய்விட்டது, ஒரு குத்து பாட்டு போய்விட்ட்து என்று வருந்தவில்லை.. இயல்பாய் படமெடுக்கிறேன் என்று முற்பட்டால் முழுசாய் முக்காடு போடாமல் காட்டவேண்டும். இம்மாதிரியான கூட்டங்களில் இயல்பாகவே இருக்கும் பாலியல் உணர்வு மேலிடதன்மை அதிகமாகவே இருக்கும். பூஜா ஒன்றும், புதிதாய் பிச்சையெடுப்பதற்கு வந்தவரில்லை.. ஸோ.. இப்பவாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

  .

  அது எப்படி இயல்பாகவே இருக்கும் ‘பாலியல் உணர்வு’?!!

  முருகன் பாத்திரம் தான், தாண்டவன் ‘வயசுக்கு வந்திட்டியா’ என்று கேட்டவுடன் ‘அவள வச்சு குச்சுள் கட்டியா பாக்க போறீங்க, எப்படி பாடறnnu கேளுங்க மொதலாளி’ என்று பொட்டில் அடித்தார் போல் கூறி விடுகிறானே! அப்புறமும் என்ன சந்தேகம் உங்களுக்கு அந்த கதாபாத்திர உருவாக்கத்தில்? அவன் அவர்களை வைத்து ‘பாலியல்l தொழில்’ செய்ய வில்லை, பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிப்பது தான் அவனது முதல் நோக்கம். அவன் தன் வாழ்வாதரத்துக்காக தேர்ந்தெடுத்து கொண்ட ‘தொழில்’ அதுதான். பிச்சை எடுக்க மறுக்கும் பெண்ணை ‘குறுக்கு’ ஒடித்து சம்மதிக்க வைப்பது தான் அவனுக்கு தெரியுமே தவிர, ஓடிப்பதற்கு முன் ஒரு தடவை அவளை ‘மேட்டர்’ செய்வோம் என்று நினைபவன் அல்ல. தனது பாலியல் தேவைகளை வேறெங்கேனும் தீர்த்து கொள்ளும் அல்லது ஒரு தார முறையில் மிகுந்த நம்பிக்கை உடையவனாக கூட இருக்கலாம் அந்த ‘தாண்டவன்’. அப்படி ஒரு தார முறையில் பற்று உள்ளவர்கள் கூட தாம் மேலாதிக்கம் செய்யும் பெண்களிடம் இப்படி சில சில்லறைதனமான கேள்விகளை கேட்டு தமது உள்வக்கிரங்களுக்கு வடிகால் தேடி கொள்பவராய் கூட இருப்பார்கள்.

  இப்படி ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சயம் பாலா அந்த பாத்திரத்தை ஒரு பாலியல் வேட்க்கை உடையவனாக உருவாக்க வில்லை. அந்த வேட்க்கை உங்கள் மனதில் மட்டும் தான் இருக்கிறது.

 2. இசைக்கான விருதுகளை இனி இவர் பெயரில் வழங்குவது தான் ராஜா அள்ளி வழங்கியிருக்கும் இசை நெசவுகளுக்கு அர்த்தம் அளிக்கும். wow wow wow, Unmai.

 3. rs, that was a nice retort. People inserting their vakrams and expecting the same in the characters and refusing to see the director’s POV is very very funny 🙂

 4. My thoughts on Naan Kadavul at my blog :
  http://sureshs65music.blogspot.com

  S.Suresh

 5. manickam,singapore

  compared to the previous movies this is the best one,coz previous speaks nothing to society(sethu,nanda,pithamagan all r gud especially, no thodai,thoppul,akkul r club dance-apart,wat is the msg?…)
  in this movie he brought us,teach us abt black world which we do not know(jst pass them by throwing 1 rupee to save us from our sins)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s