ராஜசிந்தனைகள்

அவ்வபொழுது எழும் ராஜா மீதான் விமர்சனங்களுக்கு பதிலாக ட்ராஃப்ட் எழுதி வைப்பது ஒரு பழக்கம். பின்னால் முழுமை செய்வோம் என்று அந்த நாள்தான் வருவதேயில்லை. எனவே ட்ராஃப்ட்டுகளே இனி பதிவாய்!

எனக்கு தெரிந்து ராஜாவின் இசை இரசிகர்கள், நான் உட்பட ராஜாவின் ஆளுமை மீது வெறி கொண்டவர்கள் அல்ல. அந்த ஆளுமையை அப்படியே ஏற்று கொள்கிறோம் நிறை குறைகளோடு. நமது கவணம் அவரது இசை மீது குவிய வேண்டுமே தவிர தேவையில்லாமல் மற்ற விஷயஙகளில் அல்ல. அப்படி சில விமர்சன்ங்கள் எழும் பொழுது தவிர்க்க இயலாமல் defend செய்ய வேண்டி உள்ளது.ஏதேனும் சமயத்தில் அவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து அதை குறையாய் எடுத்து யாரேனும் வைக்கும் பொழுது அதை ஒத்த மற்றொறு சமயத்தில் வேறு விதமாய்/ உயர் மனித பன்போடு அவர் நடந்து கொண்டதை சுட்டி காட்ட வேண்டி உள்ளது. A Man of extreme Eccentricities என்றே அவரை புரிந்து கொள்ள வேண்டும். இது புரிந்து கொண்ட பின் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எவராவது அவரை பற்றி குறை சொல்லும் பொழுது நாம் சிரித்து கடந்து வந்து விடலாம். இதன் மூலம் நாம் அடைவது என்ன்வென்றால், தீராது அவர் அளிக்கும் இசை இன்பத்தை அள்ளி பருக முடியும். காழ்ப்பு மட்டுமே நம் மனதில் நிறைந்து இருந்தால், சாரு போல் இரட்டை வேடம் தான் போட வேண்டும். உப்பு சப்பு இல்லாத விஷ‌யத்தை வைத்து அவருக்கு ‘மிகவும்’ பிடித்த ராஜாவின் இசையை ‘மிகவும்’ சிரமபட்டு ரசிக்க முடியாமல், அதற்க்கு 99% பேர்களுக்கு விளக்கம் வேறு அளித்து கொண்டு…ரொம்ப அவஸ்த்தையாக இருக்கும் அவருக்கு ‘ராஸலீலா’வில் வந்த பைல்ஸ் அவதி போல்.

…மேலும்,
திருவாசகம் என்பது ஒரு உள்ளார்ந்த அனுபவம் சார்ந்த படைப்பு. சிவன் மீது உள்ள வெறித்தனமான பக்தி…காதல்! மற்றும் தன்னிலை மறுத்து அவனே தஞ்சம் என்னும் என்னம் தோற்றுவிக்கும் ஒரு பிரபஞ்ச பிதற்றல்/கதறல். இந்த கதறலை, அதில் உள்ள பாவத்தை ‘ராஜாவை’ தவிர்த்து வேறு யாரெனும் தொழில்முறை பாடகர்கள் பாடியிருந்தால், தங்கள் அதி மேதாவித்தனம், உத்தி மற்றும் கமகங்கள் மூலமாக சாகடித்து இருப்பார்கள்.
எனக்கு நன்றாக நினைவுள்ளது ‘பொல்லா வினையேன்’ பாடலை முதல் முறையாக Fர். ஜெகத் கஸ்பர் அவர்களின் ஸ்டுடியோவில் வைத்து கேட்டு விட்டு, குழுமியிருந்த ரசிகர்கள் முன் எழுந்து நான் சொன்னது “நான் ஒரு நாத்திகன், ஆனால் ஆன்மீக அனுபவம் / உச்சநிலை, என்பது என்னவென்று இன்று புரிந்து கொண்டேன்”. அது மட்டுமே அந்த இசையாக்கத்தின் மய்ய நோக்கம் என்று இன்று வரை நினைக்கிறேன். சிவனை புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி. அவர்கள் என் போன்ற கடவுள் மறுப்பாளராய் இருக்கலாம் அல்லது திருவாசகத்தை அதன் மொழியால் அறிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கலாம்.
ஒரு ஜேசுதாஸோ, பாலசுப்பிரமனியோ பாடியிருந்தால்:
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்”

என்று உச்சஸ்தாயியை அடைந்து விட்டு அடுத்த வரியில்

“செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திலைத்தேன்”

என சடுதியில் கிழிறங்கும் ஸ்வரங்களை ‘பாவத்தோடு’ அடைய சிறிது சிரமபட்டிருப்பார்கள். சங்கீத விதிகளுக்கு உட்பட்டும், விலகியும் தங்கள் அதி புத்திசாலிதனத்தினால் அங்கு ஒரு ராக ஆலாபனை நிகழ்த்தி காட்டி இருப்பார்கள். ராஜாவின் குரலில் வெளிப்படும் அந்த சரனடைதலும், அழுகையும் அவர்களால் தொட்டு இருக்க முடியாது.
அடுத்து வரும் வரிகளில்
“உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யே…”
என்பதில் உள்ள ஓங்காரத்தை ஏன் ‘ஓம் சிவோஹம்’மில் உள்ளது போல் உச்சத்தில் ஒலிக்காமல் கீழுக்கும் மேலுக்கும் இடையில் இருத்தி பனிவோடு பாட வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லி புரிய வைப்பதற்க்கு கூட ராஜாவால் முடியாது. மாணிக்கவாசகரிலும்/சிவனிலும் அவர் கண்டதை அவர் எப்படி மற்றவர்களுக்கு புரிய வைத்து பாட வைப்பது? அதற்க்கு அவர் பாடித்தான் காட்ட வேண்டும். அதைத்தான் செய்து இருக்கிறார், ஒட்டு மொத்த உலகம் முன்னாலும்.
இனி யாராவது அவரை நகல் செய்து பாடி கொள்ளட்டும்.
அப்படி பாடினாலும், ராஜாவின் குரலில் “கறந்த பால் கன்னலோடு நெய்கலந்தாற் போல” என்ற வரிகளில் மிளிரும் அந்த கருனையும் அன்பும் எவருக்கேனும் வாய்க்க பெற்றால் அவர்கள் பாக்கியவான்கள்!

இதே போன்ற ஒரு சப்பை காரணத்தை ஷாஜியும் முன் வைக்கிறார். பழசிராஜாவின் அக சிறந்த பாடலாய் ‘அம்பும் கொம்பும்’மய் படைத்து விட்டு அதில் சுமாரான பாடகியான ‘மஞ்சரி’யை பாட வைத்து கெடுத்து விட்டார் ராஜா என்று. அது ஒரு பழங்குடியினர் பாடும் பாடல் என்பதும், அந்த பாட்டில் தேர்ந்த மற்றும் ஸ்ருதி சுத்தமான குரல்வளம் தேவை இல்லை என்பதும் சாதாரன ரசிகர்கள் நமக்கே புரிகிறது. பெரும் இசை விமர்சகர் இவர்… ஹும்ம்ம். பாவம் ராஜா, அதே படத்தில் ‘குன்னத்து கொன்னக்யம்’ பாடலை சித்ராவை பாட வைத்த அவருக்கு இந்த பாட்டையும் சித்ராவை பாட வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை அல்லது அதை சொல்லுவதற்க்கு கூட சாரு/ஷாஜி போன்ற அறிவுஜீவிகள் அவர் அருகில் இல்லை! என்ன செய்வார்?

நெம்ப கஸ்டம்ன்ணேன்!

Advertisements

One response to “ராஜசிந்தனைகள்

  1. even I was there in tamil mayyam when Fr ஜெகத் கஸ்பர் was playing polla venaieyen song to raja yahoo group members..it was one of the unforgettable moment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s